Home
Overview
Technical Help

Select Unit > Unit 5 > Reading 5: ஜே!Reading in Written form  Reading 2  Exercise 5  Exercise 6

மகாத்மா காந்திக்கு ஜே

ஒரு விமானம் வானத்துலெ ரொம்பவும் ஒயரத்துல பறந்துகிட்டிருந்தது. அந்த விமானம் வேகமாப் போய்க்கிட்டிருந்தது. விமானப்பயணிகள் புத்டகங்கள் படிச்சிக்கிட்டும் தூங்கிக்கிட்டும் இருந்தாங்க. விமானப்பணிப்பெண் சிரிச்சுக்கிட்டு எல்லாருக்கும் ஒதவி செஞ்சிக்கிட்டிருந்தா. அப்போ அந்த விமானத்துலெ ஒரு கோளாறு வந்து கோஞ்சம் கொஞ்சமா ஆடத் தொடங்கிச்சு. விமானத்தெ ஓட்டியவர் விமானத்து எடெயெக் கொஞ்சம் கொறைக்கணும்ண்ணு சொன்னாரு. யாராவது மூணு பேர் விமானத்துலேருந்து கீழ குதிச்சா விமானமும் மத்த பயணிகளும் பொழைப்பாங்கண்ணு சொன்னாரு.

விமானத்துலெ இருந்த அமெரிக்கர் ஒருவர் ஜார்ஜ் வாஷிங்டனுக்கு ஜேண்ணு சொல்லிக்கிட்டு விமானத்துலேருந்து கீழ குதிச்சாரு. ஒரு ரஷ்யாக் காரர் ஸ்டாலினுக்கு ஜேண்ணு சொல்லிக்கிட்டு கீழ குதிச்சாரு. அங்க இருந்த இந்தியர் ஒருத்தர் மகாத்மா கந்திக்கு ஜேண்ணு சொல்லிக்கிட்டு அவருக்குப் பக்கத்திலிருந்தவரெக் கீழ தள்ளினார்!!!

© South Asia Language Resource Center (SALRC)